Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கணவருக்கு ஏற்பட்ட “விக்கல்”…. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருமணமான ஒரு மாதத்தில் புதுமாப்பிள்ளை இறந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் அருகில் காரனுர்  கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் நல்லாத்தூர் கிராமத்தில் வசிக்கும் மஞ்சு என்ற பெண்ணும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு  காதலித்து திருமணம் செய்து உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வீட்டில் மதிய உணவு அருந்திக் கொண்டிருக்கும்போது  திடீரென  பெரியசாமிக்கு விக்கல் ஏற்பட்டுள்ளது. உடனே தண்ணீர் எடுப்பதற்காக மஞ்சு சமையலறைக்குள் சென்றுள்ளார்.  இந்நிலையில் திரும்பி வந்து பார்த்த பொழுது பெரியசாமி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதனை  பார்த்து  அதிர்ச்சியடைந்த மஞ்சு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தனது கணவரை  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள்  பெரியசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் பெரியசாமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெரியசாமி இறந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |