பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை திருடி சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தொலையாவட்டம் கோட்டவிளை பகுதியில் கூலி தொழிலாளியான ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏஞ்சல் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட ராமனுக்கு மருந்து வாங்குவதற்காக ஏஞ்சல் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு ஏஞ்சல் பேருந்தில் சென்றுள்ளார்.
அதன்பின் தொலையாவட்டம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய போது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் சங்கிலி காணாமல் போனதை கண்டு ஏஞ்சல் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ஏஞ்சல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.