கணவரை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சித்தரை பகுதியில் கூலி தொழிலாளியான கண்ணன்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிலம்பரசி(30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த 2014-ஆம் ஆண்டு கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த சிலம்பரசி தனது கணவரை வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் சிலம்பரசியை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் சிலம்பரசிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது