Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள காசிபாளையத்தில் கூலி தொழிலாளியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உஷா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 13 மாதங்களுக்கு முன்புதான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் உஷா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த உஷா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக உஷாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உஷா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |