Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சனையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சோழபுரம் பகுதியில் மாலியா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில்  அதே பகுதியை சேர்ந்த சக்தி என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து  சக்திக்கும் மாலியாவுக்கும்  இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மாலியா தனது தாய் வீட்டில்  வசித்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மாலியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாலியாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |