குடும்ப பிரச்சினையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோவில்வெண்ணி பகுதியில் அமைந்துள்ள கொட்டகையில் நாகை மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் முருகேசனுக்கு அமுதாவிற்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அமுதா தங்கியிருந்த கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அமுதாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.