Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை…. மனைவி விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் உதவி ஆட்சியர்….!

குடும்ப பிரச்சனையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கண்ணுதோப்பு கிராமத்தில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகுராணி என்ற மனைவி இருந்துள்ளார்.இந்நிலையில் சந்திரசேகருக்கும் அவரது மனைவி அழகுராணிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அழகுராணி  வீட்டில் தூக்கிட்டு   தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அழகுராணியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து அழகுராணியின் தாய்  பரமேஸ்வரி தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கை உதவி ஆட்சியர் கருணாகரன் விசாரணை செய்து வருகிறார்.

Categories

Tech |