Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை…. மனைவி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சனையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மணலூர் கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இலக்கியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ராஜ்குமாருக்கும் அவரது மனைவி இலக்கியாவிற்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த இலக்கியா தனது வீட்டில் வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்துள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த இலக்கியாவை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இலக்கியா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கை மாவட்ட ஆட்சியர் மேல் விசாரணை செய்து  வருகிறார்.

Categories

Tech |