குடும்ப பிரச்சினையில் பெண் தனது குழந்தைகளுடன் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள லட்சத்தோப்பு பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் முருகானந்தத்திருக்கும் அவரது மனைவி மகேஸ்வரிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த மகேஸ்வரி தனது மகன் தர்ஷன் மற்றும் மகள் சமயா ஆகியோருடன் சேர்ந்து பட்டுக்கோட்டை ரயில்வே நிலையத்திற்கு வந்து எக்ஸ்பிரஸ் ரயிலின் குறுக்கே குதித்து விட்டார் .
இதில் படுகாயம் அடைந்த மகேஸ்வரி மற்றும் தர்ஷன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். மேலும் காயமடைந்த சமயாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகேஸ்வரி, தர்ஷன் ஆகிய 2 பேரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.