ஆந்திர மாநிலம் நரசாராவ் பேட்டையில் ரவிச்சந்திரா என்பவர் வசித்து வந்தார். இவர் திருச்சானூர் பகுதியில் சொந்தமாக பிளாஸ்டிக் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு வசுந்தரா என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் ரேணிகுண்டாவில் குடும்பத்தோடு வசித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக கணவன்- மனைவி இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த வசுந்தரா அங்கிருந்த கத்தியை எடுத்து கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதையடுத்து வசுந்தரா தானாகவே காவல் நிலையத்தில் சரணடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.