Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கணவருடன் தகராறு” 2 மாத குழந்தைக்கு பாலில் விஷம்…. தற்கொலைக்கு முயன்ற தாய் – கோவையில் பரபரப்பு…!!

கணவருடன் தகராறு ஏற்பட்டதால்  தாய் தனது 2 மாத கைக்குழந்தைக்கு வி‌ஷத்தை கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டத்தில் உள்ள நெகமம் அருகே வடுகபாளையத்தில் வசிக்கும் மணிகண்டன் என்பவர்  கூலித்தொழிலாளி. இவருக்கு சிந்து (வயது 24) என்ற மனைவி மற்றும் 2 மாதத்தில் ஜஸ்வந்த் என்ற ஆண் குழந்தை உள்ளது. வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்குமாறு சிந்து தனது கணவரிடம் கேட்டால் உடனே பொருட்களை வாங்கி கொடுக்காமல் மணிகண்டன் காலம் தாழ்த்துவதால்  கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை  ஏற்பட்டு வந்தது. இதேபோல் சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன்  கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.


இதனால் கவலை அடைந்த சிந்து தற்கொலை செய்வது என முடிவு செய்து வீட்டில் இருந்த வி‌ஷத்தை எடுத்து தனது கைக்குழந்தைக்கு பாலில் கலந்து கொடுத்து தானும் குடித்ததால் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். அப்போது வீட்டில் தாயும், குழந்தையும் மயங்கி கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு பல்லடத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுதிக்கப்பட்டு அவர்களுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம்  குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |