பிரபல ஒடிசா நடிகை பிரக்ருதி மிஸ்ரா கடந்த ஆண்டு அவர் தேசிய விருது பெற்றார். சமீபத்தில் இவர் பிரேமம் என்ற ஒடிசா படத்தில் நடிகர் பாபுஷான் மொகந்தியுடன் இணைந்து நடித்திருந்தார். இந்நிலையில் இருவரும் நடிகர் மொகந்தியும் காரில் புவனேஸ்வர் விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த காரை வழிமறித்த மொகந்தின் மனைவி திருப்தி, அவர்கள் தவறான உறவு வைத்துள்ளார்கள் என்று கருதி அடித்து உதைத்தார் .அதுமட்டுமில்லாமல் காரில் இருந்த நடிகை மிஸ்ராவின் தலைமுடியை பிடித்து இழுத்தார். இதில் திக்குமுக்காடி போன மிஸ்ரா அங்கிருந்து தப்பி ஓடினார். இருப்பினும் அவரை விடாத திருப்தி நடுநோட்டில் அவரை விரட்டி விரட்டி அடித்தார். ஒரு வழியாக தப்பிய மிஸ்ரா அங்கிருந்து ஆட்டோவில் ஏறி ஓடினார்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்த விவகாரம் குறித்து மிஸ்ராவின் தாயார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த்தார். அதனைப் போல திருப்தியும் தங்களது வாழ்க்கைக்கு இடையூறாக விளைவிக்கும் வகையில் மிஸ்ரா நுழைவதாக கூறி புகார் அளித்துள்ளார். இந்நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரக்ருதியிடம் அவரது வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார். பிரக்ருதி பெற்றோர் முன்னிலையில் ஒரு மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது. நடிகர் பாபுசனுடன் உள்ள உறவு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பி போலீசார் விசாரணை நடத்தினர். இதனையடுத்து திருப்தி அதிபதி அளித்த புகாரின் பேரில் இந்த விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த விசாரணை விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. இந்த விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.