சின்னத் திரையில் பிரபல முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவரான பாவனா, விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர் உட்பட பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். மேலும் தற்போது கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையட்டுகளையும் தன் சுவாரஸ்யமான பேச்சால் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையில் பாவனா சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக உள்ளார்.
சமீபத்தில் கூட விராட் கோலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் பாவனா தன் கணவருடன் மாலத்தீவில் 11வது ஆண்டு திருமண நாளை கொண்டாடி இருக்கிறார். அங்கு தன் கணவருடன் பாவனா எடுத்துக்கொண்ட அழகிய ரொமான்டிக் புகைப்படங்கள் இப்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.