Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கணவருடன் வாழ பிடிக்கவில்லை” 10 ஆண்டுகளுக்கு பின் கள்ளக்காதலனுடன் பெண் கைது…. சென்னையில் பரபரப்பு…!!

கணவனை பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்த மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மருதூர் ஊராட்சி மன்ற தலைவராக சுந்தரமூர்த்தி என்பவர் இருந்துள்ளார். இவருக்கும் செந்தாமரை என்ற பெண்ணின் அக்காவுக்கும் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் மணப்பெண் வேறு ஒரு நபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனால் சுந்தரமூர்த்திக்கு அதிக வயது வித்தியாசத்துடன் இருந்த செந்தாமரையை குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் சுந்தரமூர்த்தியுடன் விருப்பமில்லாமல் செந்தாமரை தனது வாழ்வை கழித்து வந்துள்ளார். இதனையடுத்து அதே கிராமத்தில் வசிக்கும் மதியழகன் என்பவருடன் செந்தாமரைக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறிவிட்டது.

கடந்த 2009-ஆம் ஆண்டு தனது கள்ளக்காதலனுடன் இணைந்து செந்தாமரை பெட்ரோல் குண்டு வீசி சுந்தரமூர்த்தியை கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செந்தாமரை மற்றும் மதியழகன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். அதன் பின் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி 10 ஆண்டுகாலமாக விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த செந்தாமரை மற்றும் மதியழகன் ஆகிய இருவரையும் பிடிவாரன்ட் பிறப்பித்து கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி பள்ளிக்கரணை பகுதியில் பதுங்கி இருந்த செந்தாமரை மற்றும் மதியழகன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Categories

Tech |