Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கணவரை இழந்த பெண்ணுக்கு தொந்தரவு…. உறவினர் புகைப்படத்துடன் மார்பிங் செய்த நபர்…. போலீஸ் அதிரடி…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோ.கொத்தனூர் கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாணிக்கவேல் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மாணிக்கவேல் அங்கன்வாடி மையத்தில் வேலை பார்க்கும் கணவரை இழந்த பெண்ணை பின் தொடர்ந்து ஆபாசமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. மாணிக்கவேலும், உயிரிழந்த பெண்ணின் கணவரும் நண்பர்கள் ஆவர். இதனை அறிந்த பெண்ணின் உறவினர்கள் மாணிக்கவேலை கண்டித்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த மாணிக்கவேல் அந்த பெண்ணுடன் அவரது உறவினர் புகைப்படத்தை சேர்த்து மார்பிங் செய்து உறவினர் வீடுகள் மற்றும் சாலைகளில் வீசி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மாணிக்கவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |