பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள மாங்குடி கிராமத்தில் ராஜூ என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ராஜூ இறந்துவிட்டார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட செல்வராணி பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை.
இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வராணி அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செல்வராணியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.