நடிகை மீனா கணவரை இழந்த நிலையில் அவரைப் பற்றி உருக்கமாக பேசியுள்ளார் கே.எஸ்.ரவிக்குமார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பழமொழிகளில் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை மீனா. இவர் ரஜினி, கமல், மோகன்லால், மம்முட்டி, விஜய், அஜித் என பல உச்ச நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நல குறைவால் மரணம் அடைந்தார்.
அவரின் மறைவு பலருக்கும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்திய நிலையில் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிலையில் மீனா குறித்து பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உருக்கமாக பேசியுள்ளார். அவர் பேசியதாவது, வித்யாசாகர் இறப்பு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. ஷூட்டிங்கில் அழும் காட்சிகூட சிரித்து கொண்டே கேட்கும் மீனா தற்பொழுது அழுவதை பார்க்க கஷ்டமாக இருக்கின்றது. மீனாவின் தாய் அவரது பேத்தியை நினைத்து அழுவதை பார்க்கும் பொழுது வேதனையாக இருக்கின்றது. மரணம் வரும் போகும். ஆனால் அகால மரணத்தை தாங்க முடியவில்லை எனக் கூறியுள்ளார்.