Categories
தேசிய செய்திகள்

கணவரை இழந்த 35 வயது பெண்….10 வயது இளையவருடன் காதல் திருமணம்…. 2 மாதத்திற்கு பின் நடந்த அதிர்ச்சி…!!

கணவர் இறந்த பிறகு இரண்டாவதாக 10 வயது இளைய நபரை திருமணம் செய்த பெண் மர்மமான முறையில் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஷ்கர் மாநிலத்தில் வசிப்பவர் அனுசியா(35). இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், இவருடைய கணவர் கடந்த வருடம் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அனுசியா தன்னை விட 10 வயது குறைவான ஒரு நபரை காதலித்து வந்ததால் அவரை திருமணம் செய்துள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டு கழிப்பறையில் அனுசியா மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து அனுசியாவின் சடலத்தை கைப்பற்றியுள்ளனர்.

மேலும் இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் ஹித்தேஷ் கூறுகையில், “மதியம் 3 மணி அளவில் என் மனைவி கழிப்பறைக்கு சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வெளியே வராததால் நான் உள்ளே சென்று பார்த்தபோது காயத்துடன் தரையில் விழுந்து கிடந்தார். அவர் தூக்கில் தொங்கியதால் கயிறு அறுந்து கீழே விழுந்து பிணமாக கிடந்தார்” என்று கூறியுள்ளார். ஆனால் காவல்துறையினருக்கு ஹித்தேஷ் மீது சந்தேகம் வந்ததால் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் தான் மரணத்திற்கான காரணம் என்ன என்று தெரிய வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Categories

Tech |