மனைவி கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் அப்பகுதியில் தருண்(29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மைதிலி(24) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 வயதுடைய விஷால் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. நேற்று முன்தினம் விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு தருண் நண்பர்களுடன் அமர்ந்து மது குடித்துள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு வந்து மீண்டும் மது குடித்த தருணை மைதிலி கண்டித்துள்ளார்.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் தூங்க சென்றனர். நள்ளிரவு 1 மணி அளவில் மைதிலி திடீரென எழுந்து பார்த்துள்ளார். அப்போது தருண் தூக்கில் சடலமாக தொங்குவதைக் கண்டு மைதிலி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.