Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கணவரை கண்டித்த மனைவி…. தொழிலாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள முடிச்சூரில் கட்டிட தொழிலாளியான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்வத்தை லதா கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் மது பழக்கத்தை கைவிடாமல் இருந்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த லதா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லதாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |