Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கணவரை கண்டித்த மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆர்.ரெட்டியப்பட்டி பகுதியில் பரதன்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி மது குடித்துவிட்டு தகராறு செய்த பரதனை அவரது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பரதன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

இதனை அடுத்து கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பரதனின் மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரதன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |