Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கணவரை கண்டித்த மனைவி…. தொழிலாளியின் அவசர முடிவால்…. கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தொழிலாளி விஷம் குடித்த தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் கோ.ஆதனூரில் கூலி தொழிலாளி பழனிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பழனிச்சாமி தனது மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அதற்கு பழனிச்சாமியின் மனைவி சங்கீதா பணம் இல்லை என கூறி தனது கணவரை கண்டித்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் பழனிச்சாமி வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Categories

Tech |