Categories
தேசிய செய்திகள்

கணவரை காப்பாற்ற உயிர் சுவாசம் கொடுத்த மனைவி…. நெஞ்சை உலுக்கும் புகைப்படம்…. கண்ணீர்….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன.

இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதித்து ஆக்சிஜன் இன்றி உயிர் இழக்கும் முன்பு கணவருக்கு இறுதி நிமிடத்தில் மனைவி ரேணு சிங்கால் உயிர் சுவாசம் கொடுக்க முயன்ற நெஞ்சை உலுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. தான் இறந்தாலும் பரவாயில்லை தனது கணவரை எப்படியாவது பிழைக்க வைத்து விட வேண்டுமென்றே கடைசி நிமிடம் வரை அவர் போராடியும் பலனளிக்கவில்லை. அவரது கணவர் உயிரிழந்துவிட்டார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |