தேனி மாவட்டம் அருகே கள்ளக்காதலனுடன் கணவனை கொலை செய்துவிட்டு கணவரை காணவில்லை என்று மனைவி நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் கடமளைகுண்டு அருகே மேலப்பட்டி பள்ளி தெருவை சேர்ந்தவர் முத்துக்காளை கலையரசி தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கலையரசிக்கும் மேலப்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சேதுபதிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் தொடர்பாக மாறியது. கள்ளக் தொடர்ப்பு குறித்து கணவர் முத்துக்காளைக்கு தெரியவர கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முத்துக்காளை தனது சகோதரர் ஈஸ்வரனுக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் மட்டும் ஊருக்கு வருவதாக கூறிய நிலையில் ஊருக்கு வரவில்லை. இதுகுறித்து சகோதரனை காணவில்லை என்று ஈஸ்வரன் வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையே மேலப்பட்டி செல்லும் வழியில் கிணற்றில் அழுகிய நிலையில் முத்துக்காளை சடலம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து கலையரசியிடம் காவல்துறையினர் விசாரணை செய்ததில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை தீர்த்துக் கட்டிவிடலாம் என முடிவு செய்து தனது கள்ளக்காதலன் சேதுபதி மற்றும் அவரது நண்பன் கணேசன் உதவியுடன் கணவனை இரும்பு கம்பியால் தலையில் அடித்துக் கொலை செய்துவிட்டு சடலத்தை கிணற்றில் வீசியதாக ஒப்புக் கொண்டார். இந்த கொலை சம்பவத்தில் கலையரசி மற்றும் அவரது கள்ளக்காதலன் சேதுபதியையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளத் தொடர்பு காரணமாக கணவனையே கள்ளக்காதலன் துணையோடு மனைவி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.