ஆந்திர மாநிலத்தில் பெண் ஒருவர் தன் கணவரை கொலை செய்து அவரை வீட்டு தோட்டத்தில் புதைக்கப்பட்ட சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் ககன் அகர்வால் என்பது தெரியவந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அகர்வால் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ,சென்ற ஆண்டு ஜூலை மாதம் நவ்ஷுன் பேகம் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி ககன் அகர்வால் காணவில்லை என்று, அவரது சகோதரர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அவர் மனைவி நவ்ஷுன் பேகம் அவர் வசித்து வந்த வீட்டை பூட்டிவிட்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனால் சந்தேகத்தின் பெயரில் போலீசார் ,அவரது மனைவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ,அவர் தன் கணவனை கொன்றதாக ஒப்புக்கொண்டார். பேகமின் நண்பரான சுனிலின் உதவியுடன் கணவர் அகர்வாலை கொலை செய்து ,அவரது வீட்டு தோட்டத்தில் அவரை புதைத்துள்ளார். அவர் மனைவி கூறும் போது தன் கணவன் தன்னுடைய மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் கொன்றுவிட்டதாக, நவ்ஷுன்பேகம் வாக்குமூலம் அளித்துள்ளார். இறந்த கணவரின் உடலை மீட்க போலீஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். கொலை செய்யப்பட்ட மனைவி நவ்ஷுன்பேகத்தை கைது ,செய்து அவருக்கு துணையாக இருந்த சுனில் என்பவரை தேடி வருகின்றனர்.