Categories
உலக செய்திகள்

“கணவரை கொலை செய்வது எப்படி….?” என்ற நூலை எழுதி…. கடைசியில் கணவரையே…. திகிலூட்டும் சம்பவம்….!!!!

அமெரிக்காவை சேர்ந்த பெண் நான்சி. 71 வயதான இவர் கணவரை கொலை செய்வது எப்படி? என்ற நூலை எழுதி பிரபலமானவர். இவர் தன்னுடைய கணவரின் பெயரில் இருந்த ஒன்பது கோடி இன்சூரன்ஸ் பணம், 2 கோடி வீட்டை கைப்பற்றுவதற்காக தன்னுடைய கணவரை 2018 ஆம் வருடம் கொலை செய்துள்ளார் என்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இந்த பெண்ணுக்கு அவருடைய கணவரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கணவரை கொலை செய்வது எப்படி? என்ற நூலை எழுதியவர் தன்னுடைய கணவரையே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |