Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கணவரை சரமாரியாக குத்தி கொன்று வீட்டில் புதைத்த மனைவி ..!!போலீசாரால் கைது .!!

தென்காசியை சேர்ந்த பெண்ணொருவர் அவரின் கணவரை கொடூரமாக கொன்ற குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தென்காசி அருகே குத்துக்கல்வலசை அண்ணா நகர் 9 ஆம் தெருவை சேர்ந்த தங்கராஜ் இவரது மனைவி  அபிராமி இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த  சில வருடங்களுக்கு முன்  தங்கராஜ் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார் .இதனையடுத்து அபிராமி காளிராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .இந்நிலையில் காளிராஜ் என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு காணாமல் போயுள்ளார்.  இதனைப் பற்றி குடும்பத்தினர்கள் விசாரித்ததற்கு வெளியூர் சென்று விட்டதாக அபிராமி கூறியுள்ளார் .

வெகுநாட்களாகியும் காளிராஜ் திரும்பி வராத காரணத்தால்  இது பற்றி சந்தேகம் ஏற்பட்ட பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இச்சமபவத்தை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. காளிராஜின் மனைவி அபிராமிக்கு மாரிமுத்து என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதனை கண்டித்த கணவர் காளிராஜை  அபிராமி கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் .அதன்படி சம்பவத்தன்று காளிராஜிற்கு  மயக்க மருந்து கொடுத்து மயக்க நிலையில் அவரை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

பின்னர்  சடலத்தை வீட்டு வளாகத்தில்  முருகேசன் என்பவருடன் சேர்ந்து குழிதோண்டி புதைத்தது தெரியவந்துள்ளது. இதற்குப் பிறகு போலீசார் அபிராமி, மாரிமுத்து மற்றும் முருகேசனை கொலை மற்றும் அதனைச் செய்வதற்கு உடந்தையாக இருந்ததற்காக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |