Categories
உலக செய்திகள்

கணவரை திருப்திபடுத்த….. சந்தோசமாக பார்த்துக்கொள்ள….. மூன்று இளம்பெண்கள் தேவை… விளம்பரம் கொடுத்த மனைவி….!!!

தாய்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை கவனித்துக் கொள்ள பெண் தேவை என்று வெளியிட உள்ள விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தை சேர்ந்த பதீமா சாம்னன் என்னும் 44 வயது பெண்மணி தன் கணவனை கவனித்து கொள்வதற்கும், அவரை திருப்திபடுத்தவும், அவரை சந்தோஷமாக வைத்து கொள்ளவும் மூன்று பெண்கள் தேவை என விளம்பரம் ஒன்றை வெளியிட்டார்.அவர்களுக்கு சம்பளமாக ரூ. 33,800 நிர்ணயித்து உள்ளார். இந்த வீடியோ பதிவு வெளியிட்ட விளம்பரத்தில் அவர் பேசியதாவது: “என்னுடைய கணவனை கவனித்துக் கொள்வதற்கு மூன்று பெண்கள் தேவை. அவர்கள் அழகாகவும், இளமையாகவும், படித்தவர்களாகவும் இருக்க வேண்டும்.

அவர்கள் திருமணம் ஆகாதவர்களாக இருக்க வேண்டும். மாதம் உங்களுக்கு ரூ. 33,800 சம்பளம் கிடைக்கும். இலவச தங்கும் இடம் மற்றும் இலவச உணவு கிடைக்கும். உங்களுக்கும் எனக்கும் இடையே எந்த சண்டையும் வராது என்று நான் உத்தரவாதம் தருகிறேன். மூன்று பேரில் இருவர் என் கணவனின் அலுவலகப் பணிகளில் உதவியாக இருக்க வேண்டும். மீதம் உள்ள ஒருவர் என் வீட்டை கவனிப்பதோடு என் கணவர் மற்றும் குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டும். அவரின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு குழந்தை இருக்கக் கூடாது. அவரின் மகிழ்ச்சிக்காக இதை நான் செய்கிறேன். அவரை அனைத்து வகையிலும் கவனித்து நிம்மதியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு எனக்கு ஆட்கள் தேவை” என்று கூறியுள்ளார் . இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அதை பார்த்து அவரது கணவரே ஆச்சரியமடைந்துள்ளார்.

Categories

Tech |