Categories
தேசிய செய்திகள்

கணவரை பிடிக்கச் சென்ற போலீசார்…. மனைவி செய்த செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் 2019ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் பெண்ணின் கணவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் அவர் தெலுங்கானாவில் உள்ள அத்தாபூரில் இருக்கிறார் என்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடிக்க சென்றபோது அவரது மனைவி சமையல் அறையிலிருந்த மிளகாய் பொடி எடுத்து போலீசார் மீது வீசியுள்ளார்.

அதன்பிறகு போலீசார் தன்னை உடல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்ய முயன்றதாக அக்கம்பக்கத்தினரை  கூட்டியுள்ளார். இதற்கிடையில் பெண்ணின் கணவர் வீட்டை விட்டு தப்பித்து ஓடிவிட்டார். இதையடுத்து அந்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் குற்றவாளியான அவரது கணவரை தேடி வருகின்றனர்.

Categories

Tech |