Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கணவரை பிரிந்து சென்ற மனைவி… 10 ஆண்டுகள் கழித்து வாழ வந்தபின் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

பத்து வருடங்களுக்கு பிறகு கணவருடன் சேர்ந்த மனைவி அவரை கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சேலம் மாவட்டம் சிவதாபுரம் அருகே இருக்கும் செஞ்சிகோட்டை பகுதியைச் சேர்ந்த சேட்டு பூங்கொடி தம்பதியினருக்கு பவித்ரா என்ற மகளும் தமிழரசன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில்  கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் 10 வருடங்களுக்கு முன்னர் பூங்கொடி அவரை பிரிந்து சென்றார். அதன்பிறகு புருஷோத்தமன் என்பவருடன் சேர்ந்து பூங்கொடி வாழ தொடங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திரும்பி வந்த பூங்கொடி கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இதனிடையே கடந்த எட்டாம் தேதி முதல் சேட்டு மாயமானார்.

அதனையடுத்து 16 ஆம் தேதி முதல் பூங்கொடியும் மாயமானார். இதனைத்தொடர்ந்து தம்பி ராஜேந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் வீட்டின் பின்புறம் சேட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு தலைமறைவாக இருந்த பூங்கொடி மற்றும் புருஷோத்தமனை காவல்துறையினர் கைது செய்தனர்.

விசாரணையில் பூங்கொடி அளித்த வாக்குமூலத்தில், “குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக திரும்பி வந்து கணவருடன் சேர்ந்து வாழ்ந்தேன். ஆனால் அவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து இத்தனை நாட்கள் அவனோடு வாழ்ந்த விட்டு இப்போது எதற்காக வந்தாய் என தகராறு செய்தார். இதனைத் தொடர்ந்து என் காதலன் புருஷோத்தமனுடன் சேர்ந்து அவரை கொலை செய்து புதைத்தேன்” என  கூறியுள்ளார்

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |