Categories
சினிமா தமிழ் சினிமா

கணவரை பிரிந்து வாழ்வதாக பரவிய வதந்தி… பதிலடி கொடுத்த பிரியாமணி…!!!

நடிகை பிரியாமணி தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் பரவி வந்தது.

தமிழ் திரையுலகில் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரியாமணி. இதை தொடர்ந்து இவர் ஹிந்தி, தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து அசத்தி வந்தார். தற்போது இவர் கன்னடத்தில் ஒரு படத்திலும், தெலுங்கில் 2 படங்களிலும் நடித்து முடித்துள்ளார். மேலும் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் படத்தில் பிரியாமணி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

https://www.instagram.com/p/CV4Zc01h96W/

இதனிடையே நடிகை பிரியாமணி தனது கணவர் முஸ்தபா ராஜை பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில் வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தீபாவளிக்கு தனது கணவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பிரியாமணி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |