73 வயதில் கணவரை பிரிந்த மூதாட்டி காதலனை கரம் பிடித்த செய்தி சமூக வளைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
அமெரிக்காவில் வசிக்கும் 73 வயது மூதாட்டி கரோல் எச்.மேக் என்பவர் ட்விட்டரில் தனது கை விரல் மோதிரத்துடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அது குறித்த கதையை கூறியுள்ளார். அதில் மூதாட்டி கூறியிருப்பதாவது, 40 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகு 73-ஆவது வயதில் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன். 40 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு கணவர் ஏமாற்றியதால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னரே அவரை விவாகரத்து செய்து விட்டேன். அதன் பிறகு 3 ஆண்டுகள் வேறு ஒரு நபரை சந்தித்து அவருடன் காதலில் விழுந்து தற்போது மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டேன் என தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.