தனுஷை பிரிந்து வாழும் ஐஸ்வர்யா தனது தோழிகளிடம் அப்பாவின் உடல் நலத்தை குறித்து கவலைப்பட்டு வருகின்றாராம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா. கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக தனித்தனியாக இணையதளத்தில் அறிவிப்பை வெளியிட்டனர். இவர்களின் பிரிவு குடும்பத்தினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், சினிமா வட்டாரங்கள் என அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இவர்களின் இந்த பிரிவின் செய்தியை அறிந்த ரஜினி ஐஸ்வர்யாவின் மீது கோபம் கொண்டார். தந்தையின் கோபத்தை கண்ட ஐஸ்வர்யா தனுஷ் உடன் இணைந்து வாழ்வதாக தனது முடிவை மாற்றிக் கொண்டார். இதற்காக தனுஷிடம் சென்று பேசினார்.
ஆனால் தனுஷ், உன்னை போல் என்னால் முடிவை திடீரென்று மாற்றிக்கொள்ள முடியாது. எனக்கு சிறிது காலம் வேண்டும் என கூறிவிட்டார். இந்நிகழ்வு நடந்து ஒரு மாதத்தை கடந்தும் இதுவரை எந்த தகவலும் வரவில்லை. ஆதலால் ஐஸ்வர்யா நமக்கு கிடைக்க வேண்டியது எப்படியும் நம்மை வந்து சேரும். அதனால் அவர் தனது கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். தனுஷ் நல்ல முடிவை எடுப்பார் என்று ரஜினி பொறுமையுடன் காத்துக் கொண்டு இருக்கின்றார். இந்நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் பிரண்ட்ஸ்களிடம் அப்பாவின் உடல் நலனை பற்றி யோசிக்காமல் தனுஷைவிட்டு நான் பிரிந்துவிட்டேன் என கூறி அழுகின்றாராம். தன்னால் அப்பாவின் மனதுக்கும் உடல்நலத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக கருதும் ஐஸ்வர்யா தனுஷின் முடிவு நல்லதாகவே இருக்கவேண்டுமென காத்திருக்கின்றாராம்.