நடிகை டிடி அம்மாவாக போகிறார் என்பது படத்திற்காக மட்டுமே, உண்மை அல்ல.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்து தற்போது சில திரைப்படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் இவர் தற்போது சுந்தர்.சி இயக்கி வரும் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தில் டிடி கர்ப்பமாக இருப்பது போலவும் அவருக்கு வளைகாப்பு நடக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகர் விஷ்வநாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல் வளைகாப்பு என்று பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்தவர்கள் டிடிக்கு நிஜமாகவே வளைகாப்பு நடந்திருப்பதாக எண்ணினர். டிடிக்கு திருமணமாகி விவாகரத்து பெற்று அவர் தனியாகத்தான் இருக்கின்றார். அது படத்திற்காக அப்படி எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.