Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கணவரை விட்டு பிரிந்து வாழும் மகள்…. தாய் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிறுமுகை பாரதிநகரில் கூலித்தொழிலாளியான செட்டியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினரின் மூத்த மகள் பவித்ராவுக்கு மணிகண்டன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் கடந்த எட்டு மாதங்களாக பவித்ரா கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டில் வந்து தங்கியுள்ளார்.

இதனையடுத்து குழந்தை மற்றும் பவித்ராவை பார்க்க மணிகண்டன் வரவில்லை. இது பற்றி ராதா கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் மகள் கணவரை விட்டுப் பிரிந்து வாழ்வதை நினைத்து மன உளைச்சலில் இருந்த ராதா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |