வடமாநிலங்களில் திருமணங்களில் நடைபெறும் பல சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வாழ்க்கையில் நிகழும் ஒரு முக்கியமான தருணம். அது மறக்க முடியாத நிகழ்வாகவும் இருக்கும். இப்படி நடைபெறும் திருமணங்களில் பல வீடியோக்கள் சிரிக்கவைக்கும் விதமாகவும், பல வீடியோக்கள் மிகவும் அழகாகவும் இருக்கும். அது போன்ற ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பஞ்சாப் மாநிலத்தின் ஒரு திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது போல் உள்ளது. ஏனெனில் மணமக்களின் உடையும் அங்கு இருப்பவர்களின் உடையும் பஞ்சாப் மாநில மக்களின் பாரம்பரிய உடையாகவே உள்ளது.
https://www.instagram.com/p/CO9YLOsnnWH/?utm_source=ig_web_copy_link
அங்கு மணமேடையில் மணமக்கள் இருவரும் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது டர்பன் கட்டிய ஒரு சிறுவன் மணமகளின் அருகே நின்று கொண்டு அவரை பார்த்து சிரித்துக்கொண்டே உள்ளார். அவரை அருகில் வரும்படி மணமகள் அழைக்கிறார். அதனை பார்த்த சிறுவன் வெட்கப்பட்டு மகளை பார்த்து மீண்டும் சிரிக்கிறார். மணமகளின் ரியாக்சனும் சிறுவனின் தோற்றமும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. மணமேடையில் கணவர் அருகில் இருக்கும் போதே நடந்த இந்த அழகிய வீடியோ வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த பலரும் லைக் செய்து வருகின்றனர்.