Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கணவர் இறந்த துக்கம்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு காலனி பகுதிக்குட்பட்ட கருப்பசாமி கோவில் தெருவில் புவனேஸ்வரி(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துணிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புவனேஸ்வரியின் கணவர் பெருமாள் என்பவர் இறந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த புவனேஸ்வரி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புவனேஸ்வரியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |