Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கணவர் இறந்த துக்கம்…. மனைவிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கணவன் இறந்ததை தாங்க முடியாமல் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீரிப்பாறை  வெள்ளாம்பி மலை கிராமத்தில் செம்பொன் காணி- வள்ளியம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாவே செம்பொன் காணிக்கு உடல் நலம் பாதிக்கபட்டு இருந்தது. இந்நிலையில் செம்பொன் காணி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து செம்பொன் காணியின் உடலை அடக்கம் செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை அவரது உறவினர்கள் செய்துகொண்டிருந்தனர்.

அப்போது வள்ளியம்மாள் அழுதபடியே மயங்கி கீழே விழுந்து விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக வள்ளியம்மாளை  மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் வள்ளியம்மாள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உறவினர்கள் செம்பொன் காணி மற்றும் வள்ளியம்மாளின் உடல்களை அடக்கம் செய்துவிட்டனர். கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |