குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் உட்பட பழமொழிகளிலும் அசத்தி வந்த மீனா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். இவருக்கும் வித்யாசாகர் என்பவருக்கும் கடந்த 2009 ஆம் வருடம் திருமணம் முடிந்தது இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் குடும்பத்தோடு கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில் இவருடைய கணவருக்கு மட்டும் நுரையீரல் பிரச்சினை பாதிப்பு தீவிரமாகியதால் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இவருடைய மரணம் மீனாவை பெரும் சோகத்தில் ஆழ்த்தியதோடு அவருடைய இறுதிச்சடங்கு சடங்கையும் முடித்தார்.
இந்த நிலையில் தன்னுடைய கணவரின் இறப்பிற்கு பிறகு தன்னுடைய முதல் பேட்டியில், தான் இவ்வளவு தைரியமாக இந்த நிலையில் இருந்து மீண்டு வந்ததற்கு தன்னுடைய அம்மா முக்கிய காரணம். அவர் மிகவும் துணிச்சலானவர். நான் நடிக்கும் படத்தினை கூட அம்மா தான் தேர்வு செய்வார். இவ்வளவு படம் நடித்துவரும் எனக்கு அவ்வளவாக எதுவும் தெரியாது. என்னுடைய தந்தையே தன்னுடைய படம் தேதி, ஆடிட்டிங் அனைத்தையும் கவனித்துக் கொள்வார். கணவர் தங்கி இருந்த அப்பார்ட்மெண்ட் பகுதிகளில் புறா அதிகமாக இருந்தது.
அதன் இறகுகள் மற்றும் எச்சம் இதுவே அவருடைய நுரையீரல் பாதிப்பிற்கு காரணம். ஆனால் இந்த பாதிப்பிற்கான அறிகுறி எதுவுமே தெரியவில்லை பின்பு பாதிப்பை அறிந்து சிகிச்சை எடுத்து சரியானார். அதன் பிறகு கொரோனா தாக்கத்திற்கு பிறகு அனைவரும் சரியான நிலையில் அவருக்கு மட்டும் நுரையீரல் பிரச்சனை இருந்ததும் அந்த தருணத்தில் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.