கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கல்லாவி பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முன்னாள் போலீஸ் ஏட்டு. இந்நிலையில் செந்தில்குமாரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசிய வழக்கில் அவரது மனைவி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா, மகன் ஜெகதீஷ் குமார், கமல்ராஜ், பெண் சாமியார் சரோஜா, கூலிப்படையைச் சேர்ந்த விஜயகுமார், ராஜபாண்டியன் ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய பாவகல்லை சேர்ந்த சின்ன கிருஷ்ணன் என்பவரை நேற்று போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சித்ராவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய செங்குட்டுவன், வெள்ளைச்சாமி ஆகிய இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.