கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி பகுதியில் பன்னீர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளவரசி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு இளவரசிக்கும், மாரிதுரை என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இளவரசி 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் மாரிதுரை வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் கடன் வாங்கி செலவு செய்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த இளவரசி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளவரசியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.