Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கணவர் தான் காரணம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

தற்கொலை செய்த பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாகல்குழி கிராமத்தில் கூலி தொழிலாளியான ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ராஜ்குமாருக்கு தேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் தேவியின் நடத்தை மீது ராஜ்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த தேவி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேவியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து தேவியின் தற்கொலைக்கு அவரது கணவர் மற்றும் மாமியார் தான் காரணம் என்பதை வலியுறுத்தி அவரது உறவினர்கள் ஜெயம்கொண்டம் அரசு மருத்துவமனை முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |