பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் மறைவிற்கு பிறகு மகாராணி எப்படி இருக்கிறார் என்று இளையமகன் இளவரசர் எட்வர்டின் மனைவி இளவரசி சோபி தகவல் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் இளவரசர் பிலிப் நேற்று மரணமடைந்தைத்தொடர்ந்து அவரது இளைய மகனான இளவரசர் எட்வர்ட் தன் மனைவி இளவரசி சோபியுடன் வின்ஸ்டர் கோட்டைக்கு சென்றுவிட்டார். அதனைத்தொடர்ந்து இருவரும் இளவரசர் பிலிப்பின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவரின் தாய் மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு ஆறுதல் கூறி தேற்றினர்.
இதனையடுத்து வின்ஸ்டர் கோட்டையிலிருந்து வெளியேறிய, இளவரசர் எட்வர்ட் மற்றும் அவரின் மனைவி இளவரசி சோபி இருவரும் காரில் புறப்பட்டு சென்றுவிட்டனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த இளவரசி சோபி, மகாராணி தற்போது நலமுடன் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.