Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கணவர் மீது பெட்ரோலை ஊற்றி…. எரிந்து கொலை செய்த மனைவி…. தென்காசியில் பரபரப்பு சம்பவம்….!!

மது குடித்துவிட்டு தகராறு செய்த கணவரை மனைவி பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி மேலவீதி 2-வது தெருவில் கட்டிட தொழிலாளியான பரமசிவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முத்துமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பரமசிவன் முத்துமாரியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பரமசிவன் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வனத்துறை அலுவலகம் அருகே படுத்து கிடந்துள்ளார். அங்கு சென்ற முத்துமாரி தனது கணவரை எழுப்பி பேசிக்கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த முத்துமாரி தான் மறைத்து கொண்டுசென்ற பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை பரமசிவன் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார்.

அதன்பின் முத்துமாரி அங்கிருந்து சென்றுவிட்டார். இதனை அடுத்து பரமசிவனின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரமசிவன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |