Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கணவர் வீட்டு முன்பு…. பெண் குழந்தைகளுடன் தர்ணாவில் ஈடுபட்ட பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சக்திவேலுக்கு பபிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயது மற்றும் 5 மாதம் என இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். 2-வது பிரசவத்திற்காக தூத்துக்குடியில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்ற பபிதாவை சக்திவேல் பார்க்க சென்றுள்ளார். அதன் பிறகு 5 மாதமாகியும் அவர் தனது மனைவியை தொடர்பு கொண்டு பேசவில்லை. வீட்டிற்கு அழைத்துச் செல்லவும் வரவில்லை. இதனால் நேற்று முன்தினம் வாடகை காரில் குழந்தைகளுடன் கணவர் வீட்டிற்கு பபிதா வந்துள்ளார்.

அப்போது சக்திவேலின் பெற்றோர் காம்பவுண்ட் கதவை திறக்காமல் இருந்ததால் பபிதா வீட்டு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம இடத்திற்கு சென்ற பபிதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது “நான் கணவருடன் தான் வாழ விரும்புகிறேன். ஆனால் அதை ஏற்க அவரது பெற்றோர் மறுக்கின்றனர்” என கண்ணீருடன் கூறியுள்ளார். நீண்ட நேரத்திற்கு பிறகு அங்கு வந்த சக்திவேலிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து பபிதாவை குழந்தைகளுடன் ஒரு காப்பகத்தில் போலீசார் தங்க வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |