Categories
தேசிய செய்திகள்

கணவர் வீட்டை விட்டு வெளியேற்றியதால்….”மூன்று மாத குழந்தையுடன் பெண் உள்ளிருப்பு போராட்டம்”… பெண்ணின் பரிதாப நிலை..!!!

மூன்று மாத குழந்தையுடன் வந்த மனைவியை, கணவர் வீட்டிற்குள் அனுமதிக்காததால் அவர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்.

கேரள மாநிலம், பாலக்காடு பகுதியை பூர்வீகமாகக் கொண்ட மது கிருஷ்ணன் என்பவருக்கும், பதனம்திட்டாவை சேர்ந்த ஸ்ருதி என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. ஸ்ருதியை கர்ப்பம் தரித்த நிலையில் பெற்றோர் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்றார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. மூன்று மாத குழந்தையுடன் கடந்த வாரம் கணவர் வீட்டிற்கு ஸ்ருதி வந்துள்ளார். கணவர் வீட்டை பூட்டிக்கொண்டு மனைவியை உள்ளே அனுமதிக்காமல் வெளியிலேயே நிற்க வைத்துள்ளார். பிறகு அவர் ஜூலை 9-ஆம் தேதி வரை அண்டை வீடுகளில் தங்கி இருந்தார்.

பின்னர் கணவர் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் கணவர் வீட்டினர் விவாகரத்து கேட்டு துன்புறுத்துவதாக அந்த பெண்ணும், அவளது பெற்றோரும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் பெண் மற்றும் குழந்தைக்கு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதாகவும், தாய் மற்றும் குழந்தைக்கு தேவையான உதவியை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |