தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் சூர்யா -ஜோதிகா ஜோடி தங்களுடைய படங்களில் அசத்தி வந்தால், அவர்களுடைய மகள் தியா நடிப்பில் அசத்தியுள்ளார். நேற்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் தியா மொத்தம் 487 மதிப்பெண்கள் பெற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் தமிழ்-95, ஆங்கிலம்-99, கணிதம்- 100, அறிவியல்-98, சமூக அறிவியல்- 95 மதிப்பெண்கள் எடுத்து ள்ளதாக சூர்யாவின் நெருங்கிய உறவினர்கள் கூறியுள்ளனர். இதை அறிந்த ரசிகர்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.பல ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி வருபவர் சூர்யா. அவரின் மகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளதற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.