தமிழகத்தில் கணினி உதவியாளர்களுக்கு மாத ஊதியம் 14 ஆயிரமாக உயர்த்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கணினி உதவியாளர்களுக்கு மாத ஊதியம் 14 ஆயிரமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கிராமப்புறங்களில் ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கணினி உதவியாளர்களுக்கு மாத ஊதியத்தை உயர்த்தி வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள உத்தரவில், “தமிழகத்தில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் 1,843 கணினி இயக்குபவர்கள் உள்ளனர்.
கடந்த 2014ஆம் நிதியாண்டில் அவர்களுக்கான மாத ஊதியம் 11 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்ற 1,337 கணினி இயக்கும் பணியாளர்களுக்கு 15 ஆயிரமும், ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவாக உள்ளவர்களுக்கு 14,000 ஊதியத்தை உயர்த்தி வழங்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குனர் அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.