கணினி தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் முதலமைச்சர் கணினி தமிழ் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2021 -22 ஆம் ஆண்டிற்கான கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பத்தை tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாள் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூபாய் 2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது.
Categories