Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டிய மாணவர்”…. பாராட்டு…!!!!

கண்களை கட்டி சைக்கிள் ஓட்டி மாணவர் சாதனை படைத்துள்ளார்.

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் அருகே இருக்கும் தனக்கன்குளம் நேதாஜி தெருவை சேர்ந்த இளையராஜா-கலைச்செல்வி தம்பதியரின் மகன் அஸ்வின். இவர் திருநகரில் இருக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றார். இவர் உலக சாதனையாளராக வேண்டும் என்பதற்காக தனது மூளையை ஒரு நிலைப்படுத்தக் கூடிய தனித்திறனில் தன்னை தயார்படுத்தி வருகின்றார். இவர் டிஷு பேப்பரால் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு ஓவியம் வரைகின்றார்.

தன் முன் எந்த பொருளை காட்டினாலும் அதை தெள்ளத் தெளிவாக சொல்கின்றான். மேலும் ஒரு ரூபாய் நோட்டில் இருக்கும் எண்கள், ஆதார் கார்டு எண்கள் என்று கூறிய எந்த எண்கள் என்றாலும் சரியாக சொல்லி விடுகின்றார். மேலும் மக்கள் நடமாட்டம் இருக்கக்கூடிய பகுதிகளில் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள், பைக்கை ஓட்டுகின்றார். நேற்று திருநகரில் மாஸ்டர் பிரைன் அகாடமி மற்றும் ஜாக்கி புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் சார்பில் மாணவர்களுக்கான புதிய உலக சாதனை முயற்சி நடைபெற்றது. இதில் அஸ்வின் பங்கேற்று தனது தனித்திறனை வெளிப்படுத்தினார். இதில் அவருக்கு உலக சாதனை முயற்சிக்கான சான்றிதழ், பதக்கம் உள்ளிட்டவற்றை வென்றார்.

Categories

Tech |